அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.. ஆனா 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம்.. குழப்பும் சரத்

 கோவை: இம்முறை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட எண்ணுகிறோம் என அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் ஆறு வழிச்சாலையில் இணைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.                                                                          


Comments

Popular posts from this blog

மனைவி Wife

மார்ச் 4

நாம் மறந்த விளையாட்டு